வெளி நாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை அதேபோல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media