விஜயின் சொகுசு கார் வழக்கு – நடவடிக்கை எடுக்க புதிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இறக்குமதி செய்த B.M.W சொகுசுக் காருக்கு நுழைவுவரி செலுத்த தாமதப்படுத்தியதாக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், தொடர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதப்படுத்தியதாக 400சதவீத அளவுக்கு நடிகர் விஜய்க்கு வணிகரி வரித்துறை அபராதம் விதித்தது.

அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தமிழக அரசினால் விஜய்க்கு எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது? அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply