ஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.

முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் லியோ படத்தின் வசூலை சற்று குறைக்க துவங்கியுள்ளது.

இதனால் உலகளவில் ஜெய்லர் படத்தின் வசூல் லியோ முறியடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், முக்கியமான இடங்களில் ஜெய்லர் படத்தின் வசூல் லியோ படம் முறியடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது Gulf Countries-ல் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது லியோ. ஆம், ஜெய்லர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது.

ஆனால், தற்போது லியோ ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜெய்லர் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply