தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow on social media