சாதனைக்கு மேல் சாதனை படைத்த வேம்படி மகளிர் கல்லூரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர்.

8 ஏ சித்தியை 59 பேரும், 7 ஏ சித்தியை 22 பேரும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்ஷயா ஆனந்தசயனன் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply