வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இணுவில் ஆரம்ப பாடசாலை முன்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் அனுமதி பெறாது நடைபாதையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவரை, நேற்று அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்டவேளையில், குறித்த வியாபாரியால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டதோடு, பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் குறித்த பகுதியில் இன்றும் தொடர்ந்து வியாபாரம் நடைபெறுவதாக
தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் பொலிசார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர். அதேவேளை குறித்த பகுதியில் வியாபாரம் இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஷன் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply