பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வழக்கமாக செய்யும் கொரோனா சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
Follow on social media