தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடை விதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். வடகொரியா வீரர்கள் தாக்கும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆதரவு வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஜனவரி 20- ஆம் திகதி ஜோ பைடன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார்.

அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்றுடன் உக்ரைன் – ரஷியா போர் ஆரம்பித்து 1000 நாட்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி முதல்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.

அமெரிக்காவில் தயாரான நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷியா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ரஷியா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை ராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting