மடுல்சீமை மினி உலக முடிவுக்கு அருகில் உள்ள ராகல பீடபூமியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தச் சென்ற இளைஞர்களில் இருவர் குன்றின் மீதிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
நண்பனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட கடந்த (23.09.2023) ஆம் திகதி நண்பர்களுடன் கொண்டாட்ட நிகழ்வின் போது மினி உலக முடிவுக்கு கீழே உள்ள ரகல சானுவா என்ற இடத்தில் அங்கு மதுபான விருந்து வைத்துள்ளார்.
இதன்போது பிறந்தநாள் விருந்து வைத்த இளைஞன் பாறையில் இருந்து தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற நண்பரும் பாறையில் விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் ஆலோசனையின் பேரில் மடுல்சீம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media