தடி மற்றம் கற்களால் பொலிஸார் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெரிபெஹவில் வசிக்கும் 28 வயதுடைய சாரதியும் 30 வயதுடைய விவசாயி ஒருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெரிபஹா சமுர்த்தி அபிவிருத்தி வங்கிக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான நடமாடிய இருவரை சோதனையிட
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர். இதன்போது, தடியடி நடத்திய நபர், சார்ஜன்ட்டின் சீருடையை இழுத்து,
தடியால் தலையில் அடித்துள்ளார், மற்றைய நபர், கல் ஒன்றினால் கான்ஸ்டபிளின் முகம் மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow on social media