கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தற்கொலை – மீட்கப்பட்ட கடிதத்தால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன் 12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர்.

அத்தோடு இது தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply