ஈரானில் பயங்கரமான இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த இந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 73 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மேலும் 171 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
இதன் போது அவரது கல்லறைக்கு அருகாமையில் இந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாகவும் இது பயங்கரவாத தாக்குதல் எனவும் ஈரான் அதிகரி பாபக் யெக்டபாரஸ்ட் கூறினார்.
Follow on social media