வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – இன்று கடும் மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 500 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து டிசம்பர் 7 ஆம் திகதி மாலையளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது டிசம்பர் 8 ஆம் திகதி காலை அளவில் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும்

மட்டக்களப்பு – சிறிதளவில் மழை பெய்யும்

கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்

காலி – சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி – பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்

Follow on social media
CALL NOW Premium Web Hosting