இன்றைய ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்
  • மேஷம்மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது  பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
  • ரிஷபம்ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் . வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
  • மிதுனம்மிதுனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
  • கடகம்கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
  • சிம்மம்சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.
  • கன்னிகன்னி: கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
  • துலாம்துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
  • விருச்சிகம்விருச்சிகம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.  பெரியோரின் ஆசி கிட்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள் உத்தியோகத்தில் உங்கள் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.
  • தனுசுதனுசு: உங்கள் போக்கில்  கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
  • மகரம்மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • கும்பம்கும்பம்: கணவன் மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நம்பிக்கை பிறக்கும் நாள்.
  • மீனம்மீனம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.