தமிழகத்தின் நாகப்பட்டினம் வேதாரண்யம் கடற்கரை அருகே 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக மீன்பிடிப் படகில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மூவரும் தமிழக காவல்துறையின் கரையோரப் பாதுகாப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 முதல் 40 வயதுக்குட்பட்ட மூவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை இயந்திரப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
கடலோரப் பாதுகாப்புக் குழுவினர், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்காட்டுத்துறை அருகே மணியன்தீவிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவில் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
Follow on social media