கொள்கை அல்லாத கட்சியுடன் சேர்ந்தவர்கள் தான் என்னை எதிர்ப்பவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நான் எனது கொள்கையை முன்னிறுத்தி ஆதரவை கேட்டிருந்தேன் எனது கொள்கையை ஏற்றவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள் என யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(01) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையில் முதல்வர் பதவியை ஏற்று எனது ஆட்சி நிறைவுறும் காலப்பகுதி வரை எனது சக்திக்கு உட்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் முடிந்தவரை நிறைவேற்றி கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

நான் அரசாங்க கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்ததாக கூறும் கொள்கை அல்லாத கட்சியுடன் ஒன்றாய் சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். நான் ஆதரவு கேட்டவர்களிடம் எனது கொள்கையை முன்னிறுத்தி ஆதரவை கேட்டிருந்தேன் எனது கொள்கையை ஏற்றவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள்.

யாழ்மாநகர சபையில் தமிழ் மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டு சட்டவிரோத செயல்பாடுகளுடன் தொடர்பு படாத உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பயணிப்பவர்கள் என்னுடன் எப்போதும் இணைந்து கொள்ளலாம்.

ஆயினும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் போட்டியிட்ட யாழ் மாநகர சபையில் பதவி வகிக்கும் இரு உறுப்பினர்களில் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்று வருகிறது.

ஒருவர் யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி பெற்றதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பாதிக்கப்பட்டவர் முன்வந்தால் வழக்கு தொடர நான் தயாராக இருக்கிறேன்.

இவர்கள் தாங்களாக எம்முடன் இணைந்து கொள்ளவிரும்பினால் கூட எம்முடன் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை, என தெரிவித்தார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply