கிளிநொச்சி பாடசாலையில் 21 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த சம்பவம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் ஒருவரால் இளைஞனின் சடலம் அவதானிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் பாடசாலையில் இளைஞன் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow on social media