அனுராதபுரம்- கவரக்குளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பல சந்தர்ப்பங்களில் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சிப்பாய் உட்பட மூவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
மாணவி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று வரும் வழியில் , சந்தேக நபரான சிப்பாயின் வீட்டுக்கு சென்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த சிப்பாய் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பல சந்தர்ப்பங்களில் அதே பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 18 வயதான இரு இளைஞர்கள் மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அத்துடன், அதில் ஒரு நபர் மாணவிக்கு பணம் கொடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்தால் , கொலை செய்வதுவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையினை கவரக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media