இலங்கை அணி படுதோல்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஜான் ஃப்ரைலிங்க் அதிகபட்சமாக 44 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்..

இந்நிலையில் 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக 29 ஒட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 20 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜான் ஃப்ரைலின்க், பென் ஷிகோங்கோ மற்றும் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting