நான்காவது நாளாக தொடரும் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வடக்கு கிழக்கு இணைப்பினை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடரும் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனத்தில் ஒன்று கூடிய மக்கள் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டியினை வலியுறுத்தி அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று நான்காவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
50 ற்கு மேற்பட்ட மக்கள் கையில் பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியியுடனா பேச்சுவார்தையில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரோ அணியில் காணிசார்ந்த பிரச்சினைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பிரச்சினைகள் எல் வலயம் என்ற பெயரில் முல்லைத்தீவில் ஒருபகுதி முழுவதுமாக அபகரிக்கப்பட்டுள்ளது மக்கள் அகதிகளாகி இன்றும் கஸ்ரத்தினை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வினை வழங்கவேண்டும் ஜனாதிபதி சிம்மாசன உரையில் சொன்னது போல் தான் இதனை வழங்குவதாக சொல்லியுள்ளார் அதனை மையப்படுத்திதான் இந்த பேச்சுவார்தையும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரோ கொள்கையுடன் கட்சி பேதம் மறந்து மக்களுக்காக பேச்சில் கலந்துகொள்ளவேண்டும் என கோரியுள்ளார்கள்.

Follow on social media
CALL NOW

Leave a Reply