இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்..
ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொண்ட தூதுக் குழுவும் இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media