யாழில் தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்தவர் தேங்காய் விழுந்து உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.

சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இதன்போது அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்தது.

அதனையடுத்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting