கொழும்பு – புறக்கோட்டையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ காணரமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow on social media