யாழில் சிறுமியை கொடூரமாக தாக்கிய பங்குத் தந்தை – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்தில் தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என தெரிவித்து சிறுமி ஒருவரை தாக்கிய பங்குத் தந்தையை நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவச் சான்றிதழுடன் நேற்றையதினம் (05-12-2023) சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கொடிகாமம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கினார் எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் அடி காயத் தழும்புகள் உள்ளமையால் சிறுமியைத் தாக்கினார் எனக் குற்றஞ் சாட்டப்படும் பங்குத் தந்தையை இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply