15 வயதுடைய பாடசாலை மாணவிக்கு நடந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாரவில பகுதியில் தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியார், 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியாயமான தீர்ப்பை பெற்று பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட பாதிரியார் நியாயமான தீர்ப்பின் மூலம் அவர் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருப்பதால், சம்பந்தப்பட்ட பாதிரியார் குறித்து திருச்சபையால் எதுவும் கூறவோ அல்லது முடிவு செய்யவோ முடியாது என்று சிலாபம் ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார் .

இதேவேளை ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயதுடைய பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கைது செய்வதற்காக மாரவில பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting