வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29) காலை மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத்துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை தொடர்கின்றமையுடன் அதே கிராமத்தினை சேர்ந்த 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
Follow on social media