ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி வென்றது.

ஹோபர்ட் மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 188 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனைத்தொடர்ந்து 115 முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 271 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 124 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply