அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் இன்று (19) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய அமைதிப்படைகள் புரிந்த அட்டூழியத்திற்கு எதிராக அகிம்சை வழியில் இதே நாள் 1988 ஆம் ஆண்டு மட்டக்களப்பில்உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting