ஈரானில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஈரானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் புனித தலத்தில் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த பயங்கரவாதிகள் ஆலய நுழை வாயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், பெண்கள்-குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவரை கைது செய்த போலீசார், மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting