பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிய வருகிறது
சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media