மன்னாரில் ஹார்த்தலுக்கு ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மன்னார் உட்பட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணையை கோரியும் குறிப்பாக முல்லைதீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்காட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள் வாங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தனர் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அணைத்து தனியார் சேவைகளும் இன்று இயங்கவில்லை என்பதுடன் பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

அதே நேரம் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டது. வீதிகளிலும் மக்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் அவதானிக்க முடியவில்லை அத்துடன் தனியார் போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting