பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திஸ்ஸமஹாராம பிரதேசத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நாற்பத்திரண்டு வயதுடைய ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பணிபுரியும் போது, அந்தப் பாடசாலையில் பதினொராம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு
Follow on social media