விபத்தில் காயமடைந்த மாணவன் உயிரிழப்பு – மாணவி படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா – புதுக்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய குறித்த சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி. டினோஜன் 9 வயது மற்றும் 7 வயது மாணவியும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், வி.டினோஜன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting