பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை – கடற்படை வீரர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டும் உள்ள பாடசாலை பேருந்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் சாதாரண பயணியாக பயணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply