கட்டுநாயக்கவில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக பாதுகாப்பு பிரதானிகளால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் தலைவர்கள், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத் தலைவர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அங்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுண்டர் ஊடாக எவ்வாறு பதுங்கிச் செல்கின்றனர் என்பதை புலனாய்வு பிரிவின் தலைவர்கள் விபரித்துள்ளனர்.

இந்த தகவல்களை சுட்டிக்காட்டிய பின்னர், குடிவரவு கவுன்டர்களுக்கு மக்கள் வரும் வரிசைக்கு ஏற்ப கவுன்டர்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்காக, குடிவரவுத் திணைக்களத்தின் வழிகாட்டி அதிகாரி ஒருவரை முன்னால் நிறுத்தி, வரிசையாக கவுன்டர்களுக்கு மக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

செயற்பாடு தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவிற்கமைய அதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு கவுன்டரில் பயணிகளை அவர்கள் விரும்பியவாறு செல்ல அனுமதிப்பதால், கடத்தல்காரர்களுடன் நட்புறவு கொண்ட அதிகாரிகள் இருக்கும் போது, ​​கடத்தல்காரர்கள் அந்த கவுன்டர்களை தெரிவு செய்து நாட்டிற்குள் பிரவேசிப்பதும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு குடியகல்வு அதிகாரி ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டதாக பொலிஸ் மா அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply