யாழில் சிசுவைப் புதைத்த தாய் மற்றும் பாட்டிக்கு மறியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களான இரண்டு பெண்களும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

புதைக்கப்பட்ட சிசுவின் தாயும், பாட்டியுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கணக்கர்கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பிறந்த சிசு புதைக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கு காரணமாக குறித்த தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக்கொண்டு குழந்தை பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது, பின்னர் சிசுவை கொன்ற புதைத்ததாக கண்டறியப்பட்டது என தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேகத்தில் பெண்ணின் தாயை பொலிஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply