நிறைபோதையில் தாயை தாக்கிய மகனை அடித்தே கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
25 வயதான உயிரிழந்த இளைஞன் தனது தந்தை, தாய் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் அவரது வலது கால் பகுதி அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களை தாக்கி வருவதாகவும் சம்பவ இடம்பெற்ற தினம் இரவும் மது அருந்தி விட்டு வந்து
தனது தாயை தாக்கியபோது தந்தை அவரை தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Follow on social media