யாழில் பிரபல விடுதியில் சமூக சீர்கேடு – கண்டுகொள்ளாத மாநகரசபை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில் திட்டமிட்டு வளரும் இளம் பராயத்தினர் திட்டமிட்டு சீரழிக்கப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை தோற்றியுள்ள நிலையில் மீண்டும் ஒரு கலாசார சீரழிவை ஏற்படுத்தும் விதமாக பிரபலமான விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாநகர சபை மற்றும் பொலிஸாரின் அனுமதியை மீறி நேற்றையதினம்(10) இரவு இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், எனினும் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும், எனினும் அனுமதியை மீறி இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ் மாநகர ஆணையாளரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் குறித்த விடுதி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் யாழ். மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், இந்த இரவு இசை விருந்துக்கு, ஒருவருக்கு உணவுடனான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாய்க்கும், சாதாரண நுழைவுச் சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறான, கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும்.

எனினும், எவ்வித அனுமதிகளும் இன்றி களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதுடன் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலும் நிகழ்வு அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது களியாட்ட கேளிக்கை நிகழ்வின்போது, மதுபான பாவனை தாரளமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதியும் குறித்த விடுதியில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply