நியூசிலாந்தில் திடீரென வானில் தோன்றிய திகிலூட்டும் காட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நேற்று இரவு 7.30 மணியளவில், வானில் ஒரு வித்தியாசமான காட்சி தோன்றியது. இளநீல நிறத்தில் ஒரு சுழல் போல காணப்பட்ட அந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது.

சமூக ஊடகங்களில் அது குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். ஒருவர், மீண்டும் ஏலியன்கள் வந்துவிட்டன என்று கூறியிருந்தார்.

மற்றொருவர், நமது சுற்றுப்பாதையின் கருந்துளையின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அது என்று கூறியிருந்தார்.

ஆனால், ஏலியன்களோ என அஞ்சிய மக்களுக்கு தைரியத்தை ஊட்டும் வகையில், வானியல் நிபுணர்கள் அது என்ன என்று விளக்கியுள்ளார்கள்.

ராக்கெட் ஒன்று சேட்டிலைட் ஒன்றை சுற்றுப்பாதைக்குள் எடுத்துச் செல்லும்போது, அந்த ராக்கெட்டை செலுத்த உதவும் எரிபொருள் ராக்கெட்டின் பின் பகுதி வழியாக வெளியேறும்போது, தண்ணீரும் கார்பன்டையாக்சைடும் வெளியேற, அதனால் உருவாகும் ஒரு மேகம், சூரியனால் ஒளியூட்டப்படும்போது இப்படி ஒரு காட்சி உருவாகும் என்கிறார்கள் அவர்கள்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply