நடிகர் சிம்பு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார். முன்னர் போல ஹீரோ என்ற மிடுக்கு இல்லாமல் சுறுசுறுப்பாக படப்பிடிப்புகளை முடிப்பது என அடுத்தடுத்து படங்களில் பிசியாகி உள்ளார்.
படங்களில் வெற்றி பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தாலும் கூட சொந்த வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளார். நடிகர் சிம்புவிற்கு சில காதல் தோல்விகள் ஏற்பட்டது, அதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். 40 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் தேடி வருகிறார்கள், அவ்வப்போது திருமணம் குறித்து சிலமுன்னணி நடிகைகளுடன் வதந்திகளும் வருகின்றன.
தற்போது என்னவென்றால் இலங்கையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை சிம்பு திருமணம் செய்ய போவதாகவும் அவரது பெற்றோர்கள் தேர்வு செய்து முடித்துவிட்டார்கள் என செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா என்பதை சிம்பு தான் சொல்லவேண்டும் ஏனெனில் சிம்பு என்றாலே வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது.
அந்த மனுஷனும் யாரோ என்னவோ பேசுங்க என அமைதியாக வதந்திகளுக்கு வாய் திறக்காமல் உள்ளார். ஆனால் நடிகர் சிம்புவின் திருமணத்தை காண வேண்டி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.
சமூக வலைத்தளங்கள்