சிம்புவின் 5 நிமிட விடியோ – என்ன நடந்தது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் கிளைமேக்ஸிற்கு முன்பு, சிம்பு எஸ்.ஜே.சூர்யாவிடம் உருக்கமாக பேசும் காட்சி ஒன்று இருக்கும்.

அந்தக் காட்சி சிம்பு பேசும்போது மற்றவர்கள் கவனிப்பது போல் கட் செய்யப்பட்டு காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்தக் காட்சியை சிம்பு 5 நிமிடம் முழுமையாக எந்தக் கட்டும் இல்லாமல் பேசியிருந்ததாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். தற்போது இந்தக் காட்சியை மாநாடு தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply