மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு – ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 24.12.2021 அன்று முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர்பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வரை இன்றுவரை 04.01.2022 விளக்கமறியலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை 04.01.2022இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்ற உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply