O/L பரீட்சை எழுதச் சென்ற மாணவி பரீட்சை மேற்பார்வையாளரால் தகாத முறையில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றின் பாடசாலை மாணவி ஒருவரை பரீட்சை மண்டபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்.
மாணவி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றைக் கூறிய பின்னர் தனது பெற்றோருடன் சென்று கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow on social media