யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பாதுகாப்பு ஊழியரின் காடைத்தனத்தை வீடியோ எடுத்த மருத்துவ பீட மாணவி மீதும் தாக்குதல் முயற்சி
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
2022 ம் ஆண்டு இதே போல் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது அந்த சம்பவமும்
மூடிமறைக்கப்பட்டடுள்ளது.
தற்போது அந்த காணொளியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் வைத்தியசாலைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனை அளிக்கின்றது உரிய தரப்பினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow on social media