மன்னாரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.

இன்று (22) அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்றைய தினம் காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு,கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளது. எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு,உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply