பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரதி பொலிஸ்மா அதிபருடன் ஆய்வு செய்தபோது, அவர்களின் வாகனங்களையும் சோதனை செய்தோம். பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அது பாடசாலை சேவையாக மாற்றப்படுகிறது, வேன்களை எடுத்துக்கொண்டால் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பாிசோதர்களுடன் இந்த ஆய்வை செய்தோம். இதன்போது சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்தோம். இந்த விடயத்தில் நாங்கள் மிகப்பெரிய காரியத்தை செய்கின்றோம், ஏனென்றால் இது போன்ற பராமரிப்பற்ற வாகனங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுவதை தடுப்பதற்காகும் என்றார்.
Follow on social media