இன்று மட்டக்களப்பு நகரில் தனியார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக FL 4 எனும் மதுபான அனுமதிப்பத்திரமுடைய பிறேமன் எனும் நடத்துனருடைய மதுபான சாலையில்..
இன்று அரை குறை போதையுடன் பொலிஸ் சீருடையுடன் வந்த மட்டக்களப்பு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மதுபான போத்தலை கொள்வனவு செய்து கொண்டு பணத்தை இந்தா முற்சக்கர வண்டியில் உள்ளது எடுத்து தருகிறேன் என்று பணத்தை கொடுக்காமல் முற்சக்கர வண்டியில் தப்பிச் செல்லும் காட்சி இன்று இரகசிய cctv கமராவில் பதிவாகியுள்ளது.
சட்டதிட்டங்களை காப்பாற்றி மக்களைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகளே நாட்டின் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்ளும்போது சாதாரன மக்கள் எப்படி சட்ட ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பார்கள்.
இப்படியான அதிகாரிகளால்தான் இன்று மட்டக்களப்பில் அநேகமான குற்றங்கள் போதைப்பொருள் விற்பனை பாவானைகள் களவு போன்ற பெருங்குற்றங்கள் நடைபெறுகிறது…உடனடியாக இந்த பொலிஸ் அதிகாரிக்கு உரிய உயர்மட்ட அதிகாரிகள் பொலிஸ்மா அதிபர்கள் அரசியல் தலைவர்கள் சிறந்ததொரு நடவடிக்கை எடுக்கு வேண்டும்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாகிப்போய்ட்டு.
மாத்தையாவின் பதிவிகள் பறிக்கப்பட வேண்டும்…ஏன் என்றால் இப்படியான இவர் எப்படி உயர் பதவிக்கு வந்திருப்பார் என்று ஆழமாக சிந்திக்க தோன்றுகிறது… இவரின் இரண்டு தோள் பட்டைகளிலும் உள்ள உயர் அதிகாரிகளுக்குடைய பதவி இலட்சனை இரண்டு நட்சத்திரங்களை பார்த்தால்….
Follow on social media