இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள மக்களும் குறைந்த விலையில் முட்டையை நுகர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள சதொச நிறுவனங்களில் முட்டையொன்றை 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் மேல் மாகாணத்தின் அனைத்து சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளிலும் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை முட்டை விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media