இலங்கையில் 7 லட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 லட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது, நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.

அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மொத்த மின்சார பாவனையாளர்களில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply