உலகக் கிண்ணத்தில் விருதுகளை தன்வசம் ஈர்த்த வீரர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் போல் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ´கோல்டன் பூட்´ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ´கோல்டன் போல்´ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு ´கோல்டன் குளோவ்´ விருதும் வழங்கப்படும்.

1930ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளை இதுவரை பல முன்னணி கால்பாந்தாட்ட வீரர்கள் வென்றுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி கேன் 6 கோல்களை அடித்து ´கோல்டன் பூட்´ விருதை வென்றிருந்தார்.

இதையடுத்து குரோஷியா அணியைச் சேர்ந்த லூகா மோட்ரிச் ´கோல்டன் போல்´ விருதையும், பெல்ஜியம் அணியைச் சேர்ந்த திபாட் கோர்டோயிஸ் ´கோல்டன் குளோவ்´ விருதையும் வென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது கோலாகலமாக நடைபெற்ற 2022ம் ஆண்டு 22வது கால்பந்து உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அணியைச் சேர்ந்த Kylian Mbappé 8 கோல்களை அடித்து´கோல்டன் பூட்´ விருதையும், ஆர்ஜன்டீனா அணித்தலைவர் மெஸ்ஸி கோல்டன் போல்´ விருதையும் மற்றும் அதே ஆர்ஜன்டீனா அணியைச் சேர்ந்த கோல் கீப்பர் Emiliano Martínez ´கோல்டன் குளோவ்´ விருதையும் வென்றுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply